தமிழின் எல்லை என்பது தமிழகத்தோடு, இந்தியாவோடு நின்றுவிடுவதில்லை. உலகளாவிய எல்லைதான்
அதன் பெருஞ்சிறப்பு. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் முழக்கம் தமிழின் இந்த சிறப்பை நமக்குத் தெளிவாக உணர்த்தும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழியில் தோன்றிய மாபெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களது மகத்தான சாதனைகள் மூலம் இதன் பண்பாட்டைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான
ஆண்டுகளைக்  கடந்து,  இன்று  உலகம்  முழுக்க பரவியுள்ள சுமார் 8 கோடி தமிழ் பேசும் மக்களுடன் எதிர்காலத்தை நோக்கி வீறுநடை போடுகிறது தமிழ்.

சமகால பிரச்சினைகளின்போது சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் தங்களது கருத்துகளைத் தீர்க்கமாக
முன்வைத்து, பல்வேறு சமூக நிகழ்வுகளில் முன்நிற்பவர்கள் இளைஞர்களே. இணையம், கைபேசி உள்ளிட்ட
நவீனத் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களின்  மூலம்  மாற்றங்களை
உருவாக்குவதுடன் தங்கள் பண்பாடு, மரபு  ஆகியவற்றின் தொடர்ச்சி அறுபடாமல் காக்கத் துடிப்பவர்களும்
இந்த இளைஞர்களே.

வேற்றுமைகள் தாண்டி நம்மை இணைத்திருப்பதிலும் நமது  வேர்களுடன் நம்மைப் பிணைத்து  வைத்திருப்பதிலும்  மொழியின்  பங்களிப்பு  அளப்பரியது. நம்மை  ஒருங்கிணைப்பது  மட்டுமல்லாமல், நமக்கான  அடையாளத்தையும் கொடுப்பது இந்த மொழியே.

‘தி இந்து’வின் இந்த முயற்சி, தமிழின்  பெருஞ்சிறப்புகளை இளைஞர்களிடையே பறைசாற்றவும், அனைவரும்
ஒருங்கிணைந்து எதிர்காலத்தை நோக்கித் தமிழை உத்வேகத்துடன் கொண்டுசெல்வதற்கான தொடக்கமும்
ஆகும்.

‘தி இந்து’வின் ’தமிழால் இணைவோம்’ என்ற தாரக மந்திரத்துக்கேற்ப  இந்த நிகழ்வு, வேற்றுமைகளைக் கடந்து அனைவரையும் தமிழ் என்ற ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் என நம்புகிறோம்.

இது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு மாற்றங்களை சந்தித்துப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் நவீனத்துடன் பிணைத்துப் பார்க்கும் ஒரு நிகழ்வாகும். இந்த வகையில் இளைஞர்களை முன்நிறுத்தி ஒரு மொழியின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் நவீனச் சூழலில் வைத்துக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.

  • விழா நாள்: 15-09-2017 – 16-09-2017
  • நடைபெறும் இடம் :சர் முத்தா கான்சர்ட் ஹால்
    13/1, ஷென்ஸ்டோன் பார்க்,
    ஹாரிங்டன் சாலை,
    சேத்துப்பட்டு,சென்னை,
    தமிழ்நாடு – 600031

Celebration Partners

Gillette
meera
Hamam
Abirami
RAMRAJ
Aachi

Television Partner

Zee Tamil

Radio Partner

Big FM

Connectivity Partner

ACT

Multiplex Partner

AGS