தமிழ் திரு விருதுகள்

தமிழ்! நம் எண்ணமாகவும் உணர்வாகவும் பேச்சாகவும் செயலாகவும் இருக்கும் தமிழ், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தொய்வில்லாமல் பேரொளி வீசிக்கொண்டிருக்கிறது. தமிழ் எனும் அணையாத தீபத்தைக் காலம்காலமாக ஏந்தியவர்கள், ஏந்திக்கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்!

உலக அரங்கிலும் நம் மனதிலும் தமிழ் பெருமரமாக உயர்ந்து, நம் எல்லோருக்கும் நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் தன்னலம் கருதாத உழைப்பே.

பாரம்பர்யம் மிக்க இந்த மொழியையும் பண்பாட்டையும் காப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் இதன் பெருஞ்சிறப்பை உணர்த்த வேண்டியது நமது கடமையாகும். இந்த நோக்கத்தில் ‘தி இந்து’வும் ஒரு பங்களிப்பைச் செய்யவிருக்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழுக்கும், அதன் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்த ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே அடையாளம் கண்டு ‘தமிழ் திரு’ விருதுகளை வழங்கி ‘தி இந்து’ கவுரவிக்கவுள்ளது.

Celebration Partners

Gillette
meera
Hamam
Abirami
RAMRAJ
Aachi

Television Partner

Zee Tamil

Radio Partner

Big FM

Connectivity Partner

ACT

Multiplex Partner

AGS